×

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு விருது

மதுரை, ஜூன் 24: மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மதுரை, ஆழ்வார்புரம் பகுதியில் ‘டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்த அப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பாலகுருசாமி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மண்டல மேலாளர் பிரபு, முதுகலை வேதியியல் ஆசிரியர் உலகராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு தலைவர் செந்தில்குமார் செய்திருந்தார். கமுதி முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

The post 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Alwarpuram ,Madurai, Alwarpuram ,Dr. APJ Abdul Kalam Way Friends' ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு