×

பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் ஒப்பாரி போராட்டம்

மதுரை, ஜூன் 24: மதுரையில் அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் நேற்று 4வது நளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று அவர்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவும், குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்டவை செய்து தரவும் கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், நிர்வாகிகள் பாவரசு, முத்தமிழ் பாண்டியன், கனியமுதன், மனியரசு மற்றும் அப்பகுதியில் வசிக்கும் திரளான பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இந்த தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இரு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. இந்நிலையில் நேற்று 4வது நாளாக பாடை கட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

 

The post பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் ஒப்பாரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : MADURAI ,MADURA ,Madurai Vandiyur Tirthakkad ,Patta Peydakori Civilians Oppari ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...