×

வால்பாறையில் சாரல் மழை-மூடுபனி

 

வால்பாறை, ஜூன் 24: வால்பாறை பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், குளிர் மற்றும் மூடுபனி நிலவுகிறது. சோலையார் அணை, ஷேக்கல்முடி, பன்னிமேடு, கவர்கல், அக்காமலை உள்ளிட்ட பகுதிகளில் மூடுபனி நிலவுகிறது. நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவ்வப்போது, லேசான மழையும், திடீரென கன மழையும் பெய்கிறது.

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணையில் 21மி.மீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 66, கீழ்நீராறு 32, வால்பாறையில் 33மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிஏபி திட்டத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் சோலையார் அணை நிரம்பி வருகிறது. 165 அடி உயரம் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் தற்போது 65.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி நீர் வரத்து உள்ளது. தற்போது அணையில் 1504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

The post வால்பாறையில் சாரல் மழை-மூடுபனி appeared first on Dinakaran.

Tags : Valparai ,Cholaiyar Dam ,Shakelmudi ,Pannimedu ,Kavarkal ,Akkamalai ,Dinakaran ,
× RELATED சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம்...