×

மேட்டுப்பாளையத்தில் திறனறி தேர்வு பயிற்சி துவக்கம்

 

மேட்டுப்பாளையம்,ஜூன்24: மேட்டுப்பாளையம் மணி நகரில் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு தமிழக முதல்வரின் திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவக்கப்பட்டன.இப்பயிற்சி வகுப்பினை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா துவக்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இப்பயிற்சியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் ராஜாமணி,குப்புசாமி, சிவசங்கரன், மதிவாணன்,பிரின்ஸ் பிரதாபன்,மாலதி, ராஜாமணி உள்ளிட்டோர் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை நூலகர் பவித்ரா,நகராட்சி அலுவலர் ஜெயராமன்,மாரிமுத்து உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

The post மேட்டுப்பாளையத்தில் திறனறி தேர்வு பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Mettupalayam Mani Nagar ,Tamil Nadu ,Chief Minister ,Municipal Commissioner ,Amuda ,
× RELATED மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113...