×

கல்லூரி எதிரே பேக்கரியில் ரூ.3 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல்

 

ஈரோடு, ஜூன் 24: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு சத்திரோட்டில், சி.என்.சி. கல்லூரி எதிரில் ஈரோடு வடக்கு போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பேக்கரி ஒன்றில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா ஆகியவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் 305 கிலோ எடையில் ரூ. 3 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த பாலச்சந்தர் (37) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

The post கல்லூரி எதிரே பேக்கரியில் ரூ.3 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Erode ,Erode Chatroth ,C.N.C. ,Erode North Police ,Dinakaran ,
× RELATED பறிமுதல் குட்கா பதுக்கி பேரம் 2 போலீஸ்காரர் சஸ்பெண்ட்