×

திமுக பிரமுகர் கொலையில் கைதான 6 பேருக்கு ‘குண்டாஸ்’

 

திண்டுக்கல், ஜூன் 24: திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (60). திமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த மே 23ம் தேதி இரவு வேடபட்டியிலிருந்து மாயாண்டி ஜோசப் தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றபோது, மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லை சேர்ந்த சேசுராஜ்(39), டேனியல்ராஜ்(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவின்குமார்(19), ஸ்டாலின்(20) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கைதான 6 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய எஸ்பி பிரதீப் கலெக்டர் பூங்கொடிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் சேசுராஜ் உட்பட 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திமுக பிரமுகர் கொலையில் கைதான 6 பேருக்கு ‘குண்டாஸ்’ appeared first on Dinakaran.

Tags : DMK ,Dindigul ,Mayandi Joseph ,Yagapanpatti ,Vedapatti ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...