×

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேர்திருவிழா

 

திருவள்ளூர், ஜூன் 24: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் ஜெகந்நாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. இதில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு மாடவீதி உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். 8ம் நாளான இன்று பல்லக்கில் திருவீதி புறப்பாடும், மாலை 7 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடும், வேடுபறி நிகழ்ச்சியும், 9ம் நாளான நாளை 25ம் தேதி காலை 7 மணிக்கு ஏழூர் புறப்பாடும், தீர்த்தவாரி உற்சவமும் மாலை 7 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26ம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீபுஷ்பயாகம், ஸப்தாவரணம் நிகழ்ச்சியுடன் ஆனி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

The post திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேர்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Ani Brahmotsava Terthiruvizha ,Tirumazhisai Jagannath Perumal Temple ,Thiruvallur ,Jagannath Perumal temple ,Tirumazhisai ,Tiruvallur district ,Ani Brahmotsava festival ,Chariot Festival ,Ani Brahmotsava Chariot Festival ,Thirumazhisai Jagannath Perumal Temple ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...