×

செங்கல்பட்டு 1வது வார்டு பொதுமக்கள் பட்டா கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

 

செங்கல்பட்டு, ஜூன் 24: செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு களத்துமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில், பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு அரசு அதிகாரிகள் பட்டா வழங்குவதாக கூறியதோடு எங்களது பகுதியில் உள்ள வீடுகளை நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகும் பட்டா வழங்கப்படவில்லை. நாங்கள் குடியிருக்கும் பகுதி நகர நில அளவை பதிவேட்டின் படி அரசு புறம்போக்கு இடம் என்கிற வகைப் பாடாக உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் எங்கள் பகுதியில் நேரில் ஆய்வு செய்து பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

The post செங்கல்பட்டு 1வது வார்டு பொதுமக்கள் பட்டா கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,1st Ward ,Kalathumedu ,Chengalpattu Municipality ,Arunraj ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...