×

சர்வதேச யோகா தினம் பதஞ்சலி கொண்டாட்டம்

சென்னை: ஐநா அறிவிப்பின்படி, 2015ம் ஆண்டில் இருந்து, ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. அன்றைய தினம், பதஞ்சலி நிறுவனம் சார்பில் ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வழிகாட்டுதலின்படி ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி கோகபீத், பதஞ்சலி வெல்நஸ் மையத்தில் கோக பவன் ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நோய்களைத் தீர்க்க யோகா எவ்வாறு உதவுகிறது என, ராம்தேவ் விளக்கிப் பேசினார். யோகா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. வாழ்க்கையின் அங்கமாக இருந்து, நாம் எதிர்கொள்ளும் அனைத்து வித பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது. உலக அளவில் எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார சவால்களுக்கம் தீர்வு தருகிறது. இது உடலுக்கான பயிற்சி மட்டுமல்ல. மூச்சுப்பயிற்சியும் இணைந்தது. உடல், மனம் இரண்டுக்கும் உகந்தமாக உள்ளது, என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசார்யா பாலகிருஷ்ணா பேசுகையில், ‘‘யோகாவானது, உலகத்துக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசாகம். இது நமக்குப் பெருமை தரக்கூடிய விஷயம்’’ என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நோயாளிகள் சிலர், யோகாவால் தங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை விளக்கினர். சுற்றிலுமுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்த பலர் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சர்வதேச யோகா தினம் பதஞ்சலி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Patanjali ,International Yoga Day ,CHENNAI ,UN ,Ramdev ,Acharya ,International Yoga Day Patanjali Celebration ,Dinakaran ,
× RELATED ராணுவ பணியாளர்களுக்கு யோகா, தியான பயிற்சி