×

பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாஸ்க் அணிவித்த மர்மநபர்கள்: நடவடிக்கை எடுக்க தமிழ்ஆர்வலர்கள் கோரிக்கை

பெங்களூரு: பெங்களூரு, அல்சூரு ஏரிக்கரையில் திருவள்ளுவர் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, அங்கு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் திருவள்ளுவர் சிலைக்கு மாஸ்க் அணிவித்தனர். இதை யார் செய்தார்கள் என்பது தெரியாத நிலையில் தமிழ் ஆர்வலர்களின் சார்பில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் அதிகாரிகள் திருவள்ளுவர் சிலை முகத்தின் மீது கட்டியிருந்த மாஸ்கை அகற்றினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், சமுதாயத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக சமூக விரோதிகள் இவ்விதம் நடந்து கொண்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.

இதற்கிடையே திருவள்ளுவர் சிலையை சுத்தப்படுத்தி மலர் மாலை அணிவித்து தமிழ் ஆர்வலர்கள் வணங்கினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், திருவள்ளுவர் தமிழர்களின் அடையாளம். சில விஷமிகள் இவ்விதம் நடந்து கொள்வதன் மூலமாக சமூகத்தில் கலவரம் ஏற்படுத்த முயன்றுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும், என்றனர்.

The post பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாஸ்க் அணிவித்த மர்மநபர்கள்: நடவடிக்கை எடுக்க தமிழ்ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvalluwar statue ,Bangalore ,Thiruvallwar Park ,Alsuru Lake, Bangalore ,Thiruvalluvar ,Thiruvalluwar ,
× RELATED ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை...