×

கள்ளக்குறிச்சி சம்பவம் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

The post கள்ளக்குறிச்சி சம்பவம் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi incident ,Adimuga ,Chennai ,Kallakurichi ,Tamil Nadu ,Kallakurichi incident ,Adimuka protest ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 38 பேர்...