×

பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை

மணிலா: இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிமித்து வரும் சீனா மறுபுறம் தென்சீன கடல் பரப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. தென்சீன கடல் எல்லை தொடர்பான வழக்கில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தென்சீன கடல் பகுதியை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை(ஜூன் 17) சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவு பகுதிகள் அருகே சீனாவின் வணிக கப்பலும், பிலிப்பைன்சின் வணிக கப்பலும் மோதி கொண்டன. அப்போது பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்களை சீனா தாக்கி காயப்படுத்தியது. தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் இரண்டு ராணுவ படகுகளை கோடாரி, கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்களால் தாக்கி சீனா சேதப்படுத்தியது.

இந்நிலையில பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் ராணுவ அதிகாரிகளுடன் தென்சீன கடலின் மேற்குதீவு மாகாணமாக பாலவானுக்கு நேற்று சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர், “பிலிப்பைன்ஸ் ஒருபோதும் போரை தூண்டாது. எங்கள் தேசத்தை பாதுகாப்பதில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம். ஆனால் வெளிநாட்டு சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என்று தெரிவித்தார்.

The post பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை appeared first on Dinakaran.

Tags : China ,Philippine ,Philippine President Marcos Furnace ,Manila ,India ,South China Sea ,Philippines ,Vietnam ,Japan ,Malaysia ,Taiwan ,Brunei ,Dinakaran ,
× RELATED சீனா, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நடுக்கடலில் மோதல்