×

பள்ளிப்பட்டு பகுதியில் குட்கா, புகையிலை விற்ற கடைக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதி பெட்டிக் கடைகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்பட பல்வேறு போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அக்கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி பெட்டிகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், பள்ளிப்பட்டு பகுதி பெட்டிக் கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், கடையில் குட்கா, புகையிலை போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த ஆஞ்சநேய நகரை சேர்ந்த டில்லிபாபு (42), சித்தூர் சாலையில் சிவாஜி (44) ஆகிய 2 பேரின் கடைகளில் இருந்து 96 பாக்கெட் குட்கா, 112 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. பெட்டி கடைக்காரர்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post பள்ளிப்பட்டு பகுதியில் குட்கா, புகையிலை விற்ற கடைக்கு சீல்: ரூ.25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Kudka ,Tamil government ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண்ணை மாற்ற மேலும் கால...