×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எதிரொலி; காஞ்சிபுரம் தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை

காஞ்சிபுரம்: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் போலீஸ் எஸ்பி சண்முகம் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மெத்தனால் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்யுமாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளான ஒரகடம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் பல்வேறு தொழிற்சாலைகளில் சோதனை செய்தனர். அப்போது, தொழிற்சாலை நிர்வாகிகளிடம் மெத்தனாலை என்னென்ன காரணத்துக்கு பயன்படுத்துகிறீர்கள், முறையாக பயன்படுத்துகிறீர்களா, எப்படி பயன்படுத்துகிறீர்கள், வெளியாட்கள் யாரும் வந்து வாங்கி செல்கிறார்களா, மெத்தனால் இருப்பு விவரம், வாங்கிய இடங்கள் பற்றிய விவரங்களை கேட்டனர்.

 

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எதிரொலி; காஞ்சிபுரம் தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kanchipuram ,Kalachelvi Mohan ,SP Shanmugam ,Kanchipuram district ,
× RELATED நிலம் கையகப்படுத்துவதை கைவிட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு