×

மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடி அரசு அச்சுறுத்தல்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘இப்போது நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சி காலத்தில், மாணவர்களின் கல்வி முறை சீரழிந்து வருகிறது என்பதற்கு இதுவொரு துரதிர்ஷ்டவசமான உதாரணம். திறனற்ற மோடியின் அரசுதான், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க கல்வியில் கவனம் செலுத்துவதை விட, அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எல்லாவற்றையும் அமைதியாக மோடி வேடிக்கை பார்க்கிறார். வினாத்தாள் கசிவு மோசடி மற்றும் கல்வி நிறுவன மாஃபியாவின் பிடியில் சிக்கியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடியின் அரசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

The post மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடி அரசு அச்சுறுத்தல்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Rakulganti ,NEW DELHI ,Congress ,Neet ,Modi ,Rakul Gandhi ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...