×

மூவாநல்லூரில் 20.90 கோடியில் 33 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு நவீன கூடம் அமைக்கும் பணி தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி: மூவாநல்லூரில் ரூ.20.90 கோடியில் 33 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு நவீன கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை உள்ளிட்ட இய ற்கை பேரிடர் காலங்களில் திறந்த வெளி சேமிப்பு கிட ங்குகளில் வைக்கப்படும் நெல் மணிகள் சேதமடை ந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வந்தன.

இதற்கான நிரந்தர தீர்வாக மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களை கட்டித்தர வேண்டும் என விவசாயி கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.விவசாயிகளின் கோரிகைகளை ஏற்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைத்து தரப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டிஆர்பி ராஜா எம்எல்ஏ உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பரிந் துரையின் பேரில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவாநல்லூரில் 33 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மணிகளை சேமித்து வைக்கும் திறனுடைய மேற்கூரை அமைப்புடன் கூடிய 11 நவீன நெல் சேமிப்பு தளங்கள் கட்ட ரூ.20.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

இதையடுத்து இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் மற்றும் பரிந்துரை செய்த தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் மூவாநல்லூரில் அமைய உள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மூவாநல்லூரில் 20.90 கோடியில் 33 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு நவீன கூடம் அமைக்கும் பணி தீவிரம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Muvanallur ,Mannarkudi ,Mwananallur ,Muwanallur ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி...