×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 650 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நுங்கம்பாக்கத்தில் 3 இடங்களிலும், தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் ஒரு இடத்திலும் போராட்டம் நடைபெற்றது. பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி, வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ.காந்தி உள்ளிட்ட 650 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அனுமதி இன்றி போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பாஜகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 650 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Kallakurichi Vishcharaya ,Chennai ,Nungambakk ,Thiagarayar Nagar Abipulla Road ,Karu Nagarajan ,Amar Prasad Reddy ,V. B. Duraisami ,Kallakurichi Vishcharaya Suicide Incident ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்...