×

ராணிப்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜவினர் 112 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 112 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை முத்துக்கடையில் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் சம்பவத்தை கண்டித்து மாவட்ட பாஜ தலைவர் விஜயன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜகவின் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று காலை முதலே முத்துக்கடை வேம்புலி அம்மன் கோயில் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தணிகாச்சலம்,
ஒசூர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ராணிப்பேட்டை நகர தலைவர் சிவமணி உள்ளிட்ட பல பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி 9 பெண்கள் உள்பட 112 பேரை போலீசார் கைது செய்து ஆற்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் நேற்று மாலையில் விடுவித்தனர்.

 

The post ராணிப்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜவினர் 112 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Ranipet ,Ranipet Muthukadai ,president ,Vijayan ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...