×

கார்மெல் குழந்தையேசு திருத்தலத்தில் பவுர்ணமி ஜெபவழிபாடு

தஞ்சாவூர், ஜுன் 23: தஞ்சை கார்மெல் குழந்தை இயேசு திருத்தில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு முழு செபவழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு வழிபாடாக குழந்தைபேறு வேண்டுவோருக்காகவும், நோயாளிகளுக்காகவும் விசேஷ செபவழிபாடு செய்யப்படுகிறது. கார;மெல் அற்புத குழந்தையேசு திருத்தலத்தில் இந்த மாத பௌர்ணமி முழு இரவு ஜெபவழிபாடு நடைபெற்றது.

நரசிங்கனூர் அருட்தந்தை ஜேசுதாஸ் ஆசை என்ற மைய சிந்தனையில் சிறப்பு பொளர்ணமி திருப்பலி நிறைவேற்றினார். திருத்தல அதிபர் சுரேஷ்குமார், உதவி பங்குதந்தை பிரபு ஆகியோர் தலைமையில் பௌர்ணமி முழு இரவு ஜெபவழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் 1000 கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பௌர்ணமி முழு இரவு ஜெபவழிபாடு ஏற்பாடுகளை கார்மெல் அற்புத குழந்தையேசு திருத்தல அருட்தந்தை சுரேஷ்குமார், உதவி அருட்தந்தை பிரபு, பௌர்ணமி செபக்குழுவினர், பக்தர;கள் செய்திருந்தனர்,

The post கார்மெல் குழந்தையேசு திருத்தலத்தில் பவுர்ணமி ஜெபவழிபாடு appeared first on Dinakaran.

Tags : Carmel ,Infant Jesus ,Church ,Thanjavur ,Tanjore Carmel Child Jesus Thirut ,Cara ,Mel ,Jesus ,
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்