×

ஆன்மிக சொற்பொழிவு

கும்பகோணம், ஜூன் 23: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாளில் செஞ்சடையப்பர் ஆலயத்தில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு ல நாகபாலன் சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் திருப்பனந்தாள் அருணாச டேஸ்வரர் தேவஸ்தானம் தலைமையில் மகா சக்தி நாக தேவதை சக்தி பீடத்தின் செயலாளர் தீபா அறிமுகவுரையாற்றினார். மகாசக்தி நாக தேவதை சக்தி பீடம் ல நாகபாலன் சுவாமிகள் சத்திய வழியில் ஆன்மிக தேடல் தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

அப்போது கலியுக காலத்தில் நாம் அறவழியில் நடக்கவும், தீயவழி விலகுதலும் வேண்டும். நாம் போகையில் எதையும் எடுத்து செல்ல முடியாது. எனவே தருமத்தை செய்யுங்கள் அதுவே எடுத்துச்செல்லவும், அடுத்த பிறவியை நீக்கி இறைவனடி நம்மை சேர்க்குமென அருளுரை வழங்கினார். இதில் திருப்பனந்தாள் தமிழாசிரியர் தமிழ் ஒளி சண்முகநாதன், வழக்கறிஞர் சௌந்தர், சிவச்சந்திரன் மற்றும் பக்த கோடிகள் பங்கேற்றனர்.

The post ஆன்மிக சொற்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,la Nagapalan Swami ,Pradosha Day ,Thiruvidaimarudur Taluk, Tiruppanandal, Thanjavur District ,Parambarai ,Athinam ,Tirupanandal ,Deswarar Devasthanam ,Maha Shakti ,
× RELATED கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸில் குறுகிய கால சலுகை