×

இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இடுக்கி வந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு

மூணாறு, ஜூன் 23: கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட உள்ள மலையோர பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள 35 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு (என்.டி.ஆர்.எஃப்) தயார் நிலையில் உள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று இடுக்கி மாவட்டத்திற்கு வந்த டீம் கமாண்டர் அர்ஜூன்பால் ராஜ் புத்தின் தலைமையிலான 35 பேர் கொண்ட என்.டி.ஆர்.எஃப் குழுவை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கலெக்டர் ஷீபா ஜோர்ஜ், ஏ.டி.எம்.பி ஜோதி ஆகியோர் இணைந்து வரவேற்றனர். தற்காலிகமாக வெள்ளாப்பாறையில் உள்ள வனத்துறை அலுவலக கட்டிடத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுவின் முகாம் செயல்படும். தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் வருடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். மேலும் புவியியல்துறையுடன் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள அபாயகரமான இடங்களை குறித்து பரிசோதனை செய்யவும் தீர்மானித்துள்ளனர்.

The post இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இடுக்கி வந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு appeared first on Dinakaran.

Tags : National Disaster Management Team ,Munaru ,N. D. R. F ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே நெடுஞ்சாலையில் யானைகள் உலா