×

வாகனம் மோதி பசு பலி

திருவாடானை, ஜூன் 23: திருவாடானை அருகே பாரூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பசு திரிந்துள்ளது. அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பசு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த பசு உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போக்குவரத்துக்கு இடையூறாக இறந்து கிடந்த பசுவின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்
றனர்.

The post வாகனம் மோதி பசு பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Gandhi ,Parur ,Trichy-Rameswaram National Highway ,
× RELATED வீடுகளுக்கு இடையே சிக்கிய பசுமாடு உயிருடன் மீட்பு