×

இல்லம் தேடிக்கல்வி முதல்கட்ட பயிற்சி

மதுரை, ஜூன் 23: நடப்பில் உள்ள 2024 -25ம் கல்வி ஆண்டில் மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான தன்னார்வலர் பயிற்சி, மதுரையில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வரவேற்றார். தொடக்க நிலை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. ்இதில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

The post இல்லம் தேடிக்கல்வி முதல்கட்ட பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு