×

குருவாயூர் கோயிலுக்கு பிரிண்டிங் மிஷின் காணிக்கை

பாலக்காடு, ஜூன் 23: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம் பொன்னாணி கடவநாட்டைச் சேர்ந்த ஹரிதாசன் என்பவர் காணிக்கையாக குருவாயூர் கோவிலுக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுகின்ற பிரிண்டிங் இயந்திரத்தை குருவாயூர் தேவஸ்த சேர்மன் விஜயன், கோவில் தந்திரி பிரம்மஸ்ரீ தினேஷன் நம்பூதிரிப்பாட் ஆகியோரிடம் வழங்கினார்.

கொடிமரத்தின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாகி விநயன், நிர்வாகக்குழு உறுப்பினர்களான ரவீந்தரன், விஸ்வநாதன் ஆகியோர் உட்பட தேவஸ்தான ஊழியர்களும் பங்கேற்றனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் பணியார்களுக்கு அடையாள அட்டை உடனடியாக வழங்க இந்த உபகரணத்தால் முடியும் எனவும், தற்காலிக தொழிலாளர்களுக்கும் உடனடி அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

The post குருவாயூர் கோயிலுக்கு பிரிண்டிங் மிஷின் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Guruvayur Temple ,Palakkad ,Guruvayur Krishna temple ,Kerala ,Haridasan ,Ponnani ,Kadavanath ,Malappuram ,Guruvayur ,temple ,
× RELATED குருவாயூர் கோவில் உண்டியல்கள் திறப்பு ரூ.7.36 கோடி வசூல்