×

ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு

பொள்ளாச்சி, ஜூன் 23: பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகத்தை நேற்று கள் இறக்க அனுமதிகோரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது, திடீர் என ஒரு விவசாயி தான் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று விவசாயி வைத்திருந்த பூச்சி மருந்தை பறித்தனர். அந்நேரத்தில், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்காக வந்த விவசாயிகளில் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Pollachi DSP ,Dinakaran ,
× RELATED வீடுகளில் விரிசல்; பொள்ளாச்சியில் கல்...