×

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

உடுமலை, ஜூன் 23: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட முதல் எட்டு பழைய ராஜவாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு) 7520 ஏக்கர் பாசன பகுதிக்கு 24-ம் தேதி (நாளை) முதல் வரும் நவம்பர் 6-ம் தேதி வரை 135 நாட்களில் 80 நாட்கள் நீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்படுகிறது. நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து அணையில் இருந்து 2074 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ayakatdu ,Udumalai ,Tamil Nadu government ,Ramakulam ,Gallapuram ,Kumaralingam ,Sarkar Ghimputhur ,Cholamadevi ,Kanyur ,Kaduur ,Karathovu ,Ayakatu ,Amaravati Dam ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...