×

கருங்கலில் முன்னாள் எம்பி டென்னிஸ் நினைவு தினம்

கருங்கல், ஜூன் 23: குமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் 11-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு கருங்கல் ராஜீவ் காந்தி ஜங்ஷனில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ.பி. ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், கவுன்சிலர்கள் பிரேம் சிங், மார்க்ரேட், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தம்பி விஜயகுமார், பால்மணி , பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் ஸ்டாலின், ஜஸ்டின் , குமரேசன், ராஜகிளன், காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஷ், ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கருங்கலில் முன்னாள் எம்பி டென்னிஸ் நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : Memorial Day of Former MP ,Karungal ,Kumari ,Dennis ,Killiyur District Congress ,President A.P. ,Karungal Rajiv Gandhi ,Junction ,Rajasekaran ,MP Tennis Memorial Day ,Karunkal ,Dinakaran ,
× RELATED கல்யாண ஏற்பாடுகளை செய்தபோது...