×

சிங்காரபேட்டையில் முதியவர் மாயம்

கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை சந்தைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சுக்குர் (58). இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி பக்ரீத் தொழுகைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற அப்துல் சுக்குர், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சித்ரா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிங்காரபேட்டையில் முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Singarapet ,Krishnagiri ,Abdul Sukkur ,Market Street, Singharapet, Krishnagiri district ,Chitradevi ,Bakrit ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...