×

ராஞ்சியில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் 100 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோருக்கு எதிராக நில அபகரிப்பு வழங்கு தொடர்பாக பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பணமோசடி வழக்கு தொடர்பாக ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது கம்லேஷ் சிங் என்பவரது வீட்டில் இருந்து ரூ.1கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 100 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆயுத தடை சட்டத்தின் கீழ் போலீஸ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

The post ராஞ்சியில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் 100 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ranchi ,Chief Minister ,Hemant Soran ,Jharkhand ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…