×

அசாமில் கின்னஸ் சாதனை பெண் நடத்தும் டீ கடை: குவியும் பாராட்டு

கவுகாத்தி: அசாமில் நடன நிகழ்ச்சி மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பெண் டீ கடை நடத்தி வருவது பாராட்டுகளை குவித்து வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சாருஜாய் அரங்கத்தில் 2023 கின்னஸ் சாதனைக்கான பிஹூ நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹேமபிரபா பிஸ்வாஸ் என்ற பெண் 11,298 நடன கலைஞர்களுடன் பங்கேற்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அசத்தினார். இதையடுத்து அவருக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்ப்பட்டது.

ஹேமபிரபா பிஸ்வாஸ் தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை வைத்து நாகோன் மாவட்டம் ஜகலபண்டாவில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். அவரது செயலுக்கு பொதுமக்கள் உள்பட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தன் ட்விட்டர் பதிவில், ஹேமபிரபாவின் தேநீர் கடைக்கு சென்று தேநீர் பருகி விட்டு ஹேமபிரபாவுடன் உரையாடும் காட்சிகளை வௌியிட்டுள்ளார்.

The post அசாமில் கின்னஸ் சாதனை பெண் நடத்தும் டீ கடை: குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Assam ,Guwahati ,Bihu ,Record ,Sarujoy Arena ,Guwahati, Assam.… ,
× RELATED அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை