×

பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது

சிவான்: பீகாரில் அடுத்தடுத்து 2 பாலங்கள் இடிந்த நிலையில் மேலும் ஒரு பாலம் இடிந்துள்ளது. சிவான் மாவட்டம் தரவுண்டா தொகுதியின் படேதா கிராமத்தையும், மகாராஜ்கஞ்ச் தொகுதியின் கரோலி கிராமத்தையும் இணைக்கும் விதமாக ராம்கர் ஆற்றின் மீது சிறிய பாலம் கட்டப்பட்டிருந்தது. இது நேற்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பீகாரில் தொடரும் பால விபத்துகள் மக்களிடையே அரசு பொதுப்பணிகளின் தரம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.

The post பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Siwan ,Ramgarh river ,Padeda village ,Datunda ,Siwan district ,Karoli ,Maharajganj ,Dinakaran ,
× RELATED பீகாரில் அராரியாவை தொடர்ந்து மற்றொரு...