×

காஷ்மீரில் 2 அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை உறுதி

புதுடெல்லி: காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரிக்-இ-ஹூரியத்து, முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை உறுதி செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர்(மசரத் ஆலம் பிரிவு) ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசவிரோத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி உபா சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோதமானது என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. மறைந்த பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால் நிறுவப்பட்ட தெஹ்ரிக்-இ-ஹூரியத் அமைப்பு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டியதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை பரப்பியதற்காகவும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த தடை உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் நேற்று உறுதி செய்தது.

The post காஷ்மீரில் 2 அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை உறுதி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,New Delhi ,Tehreek-e-Huriyat ,Muslim League Jammu and Kashmir ,Muslim League Jammu Kashmir ,Masarat Alam Division ,Union Territory of Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்:...