×

திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மறைந்த நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரால் முன்னெடுத்து நடத்தப்பட்ட தேசிய நெல் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக உழவர்களின் பேரணி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் விதை நெல் கோட்டை மற்றும் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் உருவப்படங்கள் இடம்பெற்றது.தொடர்ந்து வேளாண் பாரம்பரிய நெல் கண்காட்சியில் நெல் ஜெயராமனால் மீட்கப்பட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்கள் இடம் பெற்றிருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அவருக்கு உழவர்களின் தோழன் என்ற விருதும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

The post திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Paddy festival ,Thirutharapoondi ,Thiruthaurapoondi ,National Paddy Festival ,Nammalwar ,Nel Jayaraman ,Tiruvarur district ,Paddy Jayaraman… ,Thiruthuraipoondi ,
× RELATED அதிமுக ஊராட்சி தலைவர் மீது அதிருப்தி 7 கவுன்சிலர்கள் ராஜினாமா