×

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி முதல் தொடங்குகிறது

சென்னை: அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துவகை ஆசிரியர்களுக்குமான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வாயிலாக மே 13ம் முதல் பதிவேற்றம் செய்யத் தொடங்கினர்.

இதற்கிடையே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பக்காலம் நிறைவடைந்து பொது மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்திய கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி முதல் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...