×

நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் புதிய திருப்பம்..!!

பீகார்: நீட் முறைகேடு விவகாரத்தில் புதிய திருப்பமாக உ.பி.யில் இருந்து பீகாருக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. காவலர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.யில் இருந்தே ஜார்க்கண்ட் வழியாக பீகார் மாநிலத்துக்கு நீட் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் நீட் வினாத்தாளை கசியவிட்டு விற்பனை செய்தது சஞ்சீவ் முக்யா என்பவர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள முக்யாவின் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,BIKAR ,U. ,Ravi Atri ,NEET ,
× RELATED நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24...