×

சாவில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினர்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்

சென்னை: சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போல் மூடி மறைக்கப் பார்த்த அரசு போல் செயல்படவில்லை. துணிச்சலுடன் களத்தில் நின்று எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அரசே மக்களுக்கானது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் வருந்தத்தக்கது; அரசின் உதவிகள் அக்குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். விஷச் சாராய விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை என அரசு எச்சரித்துள்ளது என்று அவர் கூறினார்.

 

The post சாவில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினர்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் appeared first on Dinakaran.

Tags : Opposition ,DMK ,Tamilachi Thangapandian ,Chennai ,Chembarambakkam lake ,Thoothukudi ,
× RELATED 40 தொகுதியில் வெற்றி பெற்று பலன் இல்லை...