×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை: ஆட்சியர் பிரசாந்த்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ,”மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேரின் உடல்நிலை முன்னேறியுள்ளது. கள்ளச்சாராய புழக்கம் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விஷ சாராயத்தால் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன”இவ்வாறு தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை: ஆட்சியர் பிரசாந்த் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Adshiar Prashant Kallakurichi ,Aadsir Prashant ,Kallacharaya ,Adysir Prashant ,
× RELATED விஷச் சாராயம்: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை