×

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை..!!

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாது. சட்டமன்ற அவை விதிகளுக்கு உட்பட்டே அவையை வழிநடத்த முடியும். கேள்வி நேரத்துக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சனை எழுப்புவது ஏற்க கூடியது அல்ல என்று சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தை இன்றும் விவாதிக்க அனுமதிக்காததால் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.

 

The post அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appavu ,AIADMK ,CHENNAI ,Appa ,
× RELATED அதிமுக உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக...