×

பத்ராத்திரி கொத்தக்கூடம் மாவட்டத்தில் வீட்டில் 32 நாகப்பாம்பு குட்டிகள் கண்டெடுப்பு

திருமலை : பத்ராத்திரி கொத்தக்கூடம் மாவட்டத்தில் வீட்டில் 32 நாகப்பாம்பு குட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொட்டகுடத்தில் உள்ள நேரு பஸ்தியை சேர்ந்த மின்வாரிய எலக்ட்ரீஷியன் ராஜு. இவரது வீட்டில் சுவரில் உள்ள ஓட்டையில் பாம்பு குட்டி இருப்பதை பார்த்து பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து பாம்பு பிடிப்பாளர் குழுவினர் பல மணி நேரம் போராடி ஒரு பெரிய பாம்புடன் அதன் 32 குட்டி நாகப்பாம்புகளுடன் பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். ஒரு வீட்டில் 32 நாகப்பாம்பு குட்டிகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பத்ராத்திரி கொத்தக்கூடம் மாவட்டத்தில் வீட்டில் 32 நாகப்பாம்பு குட்டிகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Bhadratri Kothakudam district ,Thirumalai ,Raju ,Nehru Basti ,Bhadratri Kotakudam, Telangana ,
× RELATED வீட்டுச்சுவர் ஓட்டையில் 32 நாகப்பாம்பு குட்டிகள்