×

செய்யாற்றின் குறுக்கே எலத்தூர் கிராமத்தில் அணைக்கட்டு மறு கட்டுமான பணி மேற்கொள்ள ₹18.40 கோடி ஒதுக்கீடு

*விவசாயிகள் மகிழ்ச்சி

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் குறுக்கே எலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அணைக்கட்டு மறு கட்டுமான பணி மேற்கொள்ள நேற்று ரூ.18.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்யாற்றின் கரையோரம் கிராமங்களை உள்ளடக்கியது கலசப்பாக்கம் தொகுதி. தற்போது கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே 4 இடங்களில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு பல ஆண்டு காலமாக பழுதடைந்துள்ளது.

பழுதடைந்துள்ள அணைக்கட்டு மறு கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டும் என தொகுதி எம்எல்ஏ பெ சு தி சரவணனிடம் பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து பொதுமக்கள் விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் எ.வ வேலு ஆகியோரிடம் எம்எல்ஏ தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

நேற்று நீர்வள மானிய கோரிக்கையில் செய்யாற்றின் குறுக்கே எலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மேல் செய்யாறு அணைக்கட்டு மறு கட்டுமான பணிகள் மேற்கொள்ள ரூ.18.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அறிவிப்பினை நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் அறிவித்தார். பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post செய்யாற்றின் குறுக்கே எலத்தூர் கிராமத்தில் அணைக்கட்டு மறு கட்டுமான பணி மேற்கொள்ள ₹18.40 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Elathur village ,Kalasappakkam ,Elathur ,Seyyar ,Kalasapakkam… ,Dinakaran ,
× RELATED அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய...