×

தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி எம்பி பிறந்த நாள் விழா

சாத்தான்குளம் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பியின் 54வது பிறந்த நாள் விழாவை தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரசார் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். சாத்தான்குளத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.சாத்தான்குளம் வட்டார, நகர காங். சார்பில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது அரசியல் தன்மையா? அல்லது நிர்வாகத் திறமையா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். நகர தலைவர் வேணுகோபால் நடுவராகவும், அரசியலே என்ற தலைப்பில் ஆழ்வை மேற்கு வட்டார தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு, மகிளா காங்கிரஸ் தலைவி பாலா, ஜென்சி, நிர்வாகமே என்ற தலைப்பில் ஜாண் ஆசிரியர், மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன், பேச்சாளர் ஞானப்பிரகாஷ் ஆகியோர் விவாதங்களை முன் வைத்தனர்.

இதில், ராகுல்காந்தி எம்பி மற்றும் அவர் வழியில் நடந்து வரும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ போன்ற நிர்வாக திறமை கொண்ட ஒரு அரசியல்வாதியால் தான் தன் தாய் நாட்டையும், மக்களையும் சரியான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. பட்டிமன்றத்தில் சாத்தான்குளம் தெற்கு வட்டார தலைவர் பிரபு கிருபாகரன், பன்னம்பாறை ஊராட்சி தலைவர் அழகேசன், பேரூராட்சி கவுன்சிலர் லிங்கப்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், மாவட்ட இளைஞர் காங். துணை தலைவர் பாஸ்கர், வை. தொகுதி இளைஞர் காங். செயலாளர் ஜாண்ராஜா, நகர இளைஞர் காங். தலைவர் சிவா, ஓபிசி வட்டார தலைவர் சிவபாலன், சாத்தான்குளம் வட்டார ஊடகப்பிரிவு தலைவர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேய்க்குளம் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டார காங். தலைவர் டாக்டர் ரமேஷ்பிரபு தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், பேய்க்குளம் நகர தலைவர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாசரேத் பஸ் நிலையம் அருகே நகர தலைவர் செல்வக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் எட்வர்ட் கண்ணப்பா, நகர முன்னாள் தலைவர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு பொறுப்பாளர்கள் சந்திரன், ஜெயக்குமார், பிரேம்குமார், ஜோசப், பாஸ்கர், பிரகாஷ், விஜி, ராஜாசிங், நசரேயன், காமராஜ், விஜய் உள்பட பலர் பங்கேற்றனர்.

சாயர்புரம் தூய ரபாயேல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை வை. கிழக்கு வட்டார காங். தலைவர் ஜெயராஜ் துவக்கி வைத்தார். ஏரல் வட்டார தலைவர் தாசன், ஒன்றிய கவுன்சிலர் பாரத் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் ஜெபக்குமார் லூயிஸ் சிறப்பு ஜெபம் செய்து வரவேற்றார். வட்டார தலைவர் ஜெயசீலன், மாவட்ட இளைஞர் காங். தலைவர் இசைசங்கர், சாயர்புரம் நகர தலைவர் ஜெயக்குமார் சந்தோஸ், எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில செயலாளர் லட்சுமணன், மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சையா, மீனவரணி செயலாளர் அந்தோணி காந்தி, வட்டார பொருளாளர் அய்யம்பெருமாள், கிராம கமிட்டி தலைவர்கள் பழையகாயல் பொன்னம்பலம், கோவங்காடு பால்ராஜ், அழகியநம்பி லட்சுமிபுரம் காந்தி, வாழவல்லான் முத்துராமன், கொற்கை வேம்புதுரை மற்றும் பைசல் அலி, சேகர், தலைவாணி, முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆத்தூரில் முடுக்குதெரு பஞ். யூனியன் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆழ்வை கிழக்கு வட்டார காங். தலைவர் பாலசிங், ஆத்தூர் நகர தலைவர் சின்னத்துரை உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆழ்வார்திருநகரியில் காமராஜர் சிலை அருகில் வட்டார தலைவர் கோதண்டராமன் தலைமையில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் கண்ணன், இளைஞர் காங். தலைவர் ஆத்திராஜ் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் மாரியம்மாள், வட்டார பொருளாளர் விஜயகரன், துணை தலைவர் சேகர், மாவட்ட பஞ். முன்னாள் கவுன்சிலர் ராஜாத்தி செல்லத்துரை, பால்குளம் கிராம காங். தலைவர்கள் பால்குளம் லட்சுமணராஜ், செம்பூர் காளிரத்தினம், மணல்குண்டு வனச்செல்வன், வட்டார செயலாளர் சிவசக்திவேல், அமைப்புசாரா வட்டார தலைவர் இசக்கிராஜா, ஆழ்வை ஆஸ்கின், அஜ்மல், ஜூலியட், உடையார்குளம் செல்வராஜ், சாலமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி எம்பி பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Thoothukudi district ,Chatankulam ,Congress ,President ,Satankulam ,Satankulam District ,City Congress ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...