×

அறந்தாங்கி அருகே வெறி நாய் கடித்ததில் 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்

 

அறந்தாங்கி, ஜூன் 22: அறந்தாங்கி அருகே வெறிநாய் கடித்ததில் 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஜிஹெச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த அம்மாபட்டினம் ஊராட்சியில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்துள்ளது. அந்த நாய் அம்மாபட்டினம் பகுதியில் இருந்த ஆடு, மாடு, கோழிகளை கடித்து வந்துள்ளது.

அந்த நாயை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடமும், மணமேல்குடி காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்குள் வந்த அந்த வெறிநாய் அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகம்மது பாத்திமா(52), ராபர்ட்(26), முகம்மது தவுபிக்(9), தப்பிஷிரா(8), உமைரா சிபா(5), சுசேந்திரன்(7), ஹரிமித்ரன்(3) என இந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை கை, கால், தொடை, மார்பகம், இடுப்பு, தலைப்பகுதிகளில் கடித்து குதறி உள்ளது.

இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் நாய் கடியில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

The post அறந்தாங்கி அருகே வெறி நாய் கடித்ததில் 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Arantangi ,GHC ,Pudukkottai District ,Manamalkudi ,Ammapatnam Uratchi ,Karantangi ,
× RELATED அறந்தாங்கி அருகே வெறி நாய் கடித்ததில் 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்