×

மகிழ்ச்சியான வாழ்வுக்கு யோகாவே சிறந்த மருந்து

 

அரியலூர், ஜூன் 22: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் மகிழ்ச்சியான வாழ்வுக்கு யோகாவே சிறந்த மருந்து என்று அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் கலந்து கொண்டு பேசினார். அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இவ்விழாவில் அரியலூர் டிஎஸ்பி கலந்து கொண்டு பேசியதாவது:

யோகா உடல், மனம், ஆன்மீகம் ,நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது . எண்ணங்களை கட்டுப்படுதுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மனிதர்களுக்கும், இயற்கைக்கும் உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. யோகாவை தொடர்ந்து செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன . மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், கவனச் சிதறல் இன்றி மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளமாக யோகா அமைகிறது. மன அழுத்தம், இதய நோய் , நீரிழிவு நோய் தூக்கமின்மை ஆகியவற்றை அகற்றுகிறது.

5000 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் வழங்கிய யோகா கலையை மாணவ, மாணவிகள் கற்று பயன் பெற வேண்டும் என்றார். பின்னர் அவர் , யோகா பயிற்சியை தொடங்கி வைத்தும், மாணவ,மாணவிகளிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். காவலர் தங்கபாபு, சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில் ராஜ் , ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், கோகிலா, தங்கபாண்டி , அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மகிழ்ச்சியான வாழ்வுக்கு யோகாவே சிறந்த மருந்து appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Assistant Superintendent of Police ,Sankarganesh ,International Yoga Day ,Siruvalur Government High School ,
× RELATED வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி