×

தென்மேற்கு பருவமழை எதிரொலி வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது?

 

கரூர், ஜூன் 22: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணை பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் தடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வடிவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட உதவி அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது, மரம் விழுந்தால் எவ்வாறு தப்பிப்பது, இடி தாக்கினால் எப்படி தப்பிப்பது போன்ற நிகழ்வுகள் குறித்து பல்வேறு வகையான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தி காட்டி, செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தென்மேற்கு பருவமழை எதிரொலி வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது? appeared first on Dinakaran.

Tags : Southwest Monsoon ,Karur ,fire ,Amaravati ,Periandangoil ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி வெளி...