×

வேதாரண்யம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது

 

வேதாரண்யம், ஜூன் 22: வேதாரண்யம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கேத்தரின் எஸ்தர் மற்றும் போலீசார் கோடியக்கரை பகுதியில் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை திருவள்ளுவர் சாலையில் பாண்டி சாராயம் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (43) என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் மறைத்து வைத்திருந்த 25 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோல் நெய்விளக்கு கீழக்காட்டில் பனங்கள்ளு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சப்பன் (75) என்பவர் அனுமதி பெறாமல் பனங்கள்ளு இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர் மறைத்து வைத்திருந்த 25 லிட்டர் பனங்கள்ளு கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post வேதாரண்யம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,inspector ,Catherine Esther ,Kodiakkarai ,Pandi ,Tiruvalluvar road ,Kodiakkara ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு