×

தென்காசியில் இன்று இலவச மருத்துவ முகாம்

 

தென்காசி, ஜூன் 22: கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம், குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் ஆகியவற்றின் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசியில் இன்று குற்றாலம் ரோட்டரி கிளப், குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் ஆகியவற்றுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தென்காசி றி.டி அருணாசலம் ரோட்டரி அரங்கில் வைத்து காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் இலவச ரத்த அழுத்த பரிசோதனை, இலவச ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, இலவச இசிஜி பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனை ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை, குற்றாலம் ரோட்டரி கிளப், குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் ஆகியோர் செய்துள்ளனர்.

The post தென்காசியில் இன்று இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kim's Health Hospital ,Rotary Club ,Courtalam ,Courtalam Central Rotary Club ,Thiruvananthapuram Kim's Hospital ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...