×

குடிபோதையில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: வாலிபர் கைது

திருத்தணி: குடிபோதையில் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(58). பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோவிந்தன் அவரது குடும்பத்துடன் மாடி வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நேற்று அதிகாலை மீண்டும் மாடி வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்தார். அப்போது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் பார்த்தபோது திருடப்பட்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவிந்தன் திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் எல்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தரன்சாய்(27) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் நகை மற்றும் பணம் திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், போலீசார் தரன்சாய்யை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

The post குடிபோதையில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : THIRUTHANI ,G. Govindhan ,Kandikai village ,Govindhan ,
× RELATED இரு மாநிலங்களை இணைக்கும் திருத்தணி –...