×

ஜமாபந்தி நிகழ்ச்சியில் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: கிராம மக்கள் சப் – கலெக்டரிடம் மனு

பொன்னேரி: மெதூர் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் காணவில்லை, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சப் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட மெதூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது:

மெதூர் 3வது பகுதியில் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர் இளையமணி என்பவர் கடந்த ஒரு மாதமாக சரிவர பணிக்கு வரவில்லை, அப்படி வந்தாலும் சான்றிதழ்கள் தருவதில்லை சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகள் இல்லாததால் விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஜமாபந்தி அதிகாரியும் சப் கலெக்டருமான சாஹே சன்கேத் பல்வந்திடம் புகார் மனு கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்டவர் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

The post ஜமாபந்தி நிகழ்ச்சியில் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: கிராம மக்கள் சப் – கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Mettur ,Medhur ,Ponneri taluka ,taluka ,Jamabandhi ,Dinakaran ,
× RELATED ஊருக்கே நல்ல தண்ணீர் கொடுக்கும்...