×

திருவேற்காட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பரிதாபமாக பலியானார். திருவேற்காடு அடுத்த கோலடி, தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(23), எலக்ட்ரீஷின். இவரது மாமா ராமகிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். இந்நிலையில், பேக்கரி கடை புதுப்பிக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, சக்திவேல் பேக்கரி கடையின் பெயர் பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அருகே சென்ற மின் வயரில் சக்திவேலின் கை உரசியதில் மின்சாராம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மயங்கிக் கிடந்த சக்திவேலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருவேற்காட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Poonthamalli ,Shaktivel ,Devi Nagar ,Tiruvekadu ,Koladi ,Ramakrishnan ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...