×

திருவள்ளூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 47 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 36 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 119 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். அப்போது நேர்முகத் தேர்வின் மூலம் 47 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த முகாமிற்கு வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் க.விஜயா தலைமை தாங்கி தேர்வு செய்யப்பட்ட 47 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பி.வடிவேல், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஜி.ந.காமராஜ், மா.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 2ம் கட்ட தேர்விற்கு 74 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post திருவள்ளூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 47 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,District Employment and Vocational Guidance Centre ,
× RELATED ஊட்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்